Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ யு.பி.எஸ்., திட்டத்துக்கு காலக்கெடு நீட்டிப்பு

யு.பி.எஸ்., திட்டத்துக்கு காலக்கெடு நீட்டிப்பு

யு.பி.எஸ்., திட்டத்துக்கு காலக்கெடு நீட்டிப்பு

யு.பி.எஸ்., திட்டத்துக்கு காலக்கெடு நீட்டிப்பு

ADDED : ஜூன் 24, 2025 05:29 AM


Google News
புதுடில்லி: 'யுனிபைடு பென்ஷன் ஸ்கீம்' எனப்படும், யு.பி.எஸ்., திட்டத்தில் சேர்வதற்கான காலக்கெடுவை மத்திய அரசு மூன்று மாதங்கள் நீட்டித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள், காலமான ஊழியர் மற்றும் ஓய்வூதியரின் வாழ்க்கைத் துணை ஆகியோர், யுனிபைடு பென்ஷன் ஸ்கீமை தேர்வு செய்ய, வரும் ஜூன் 30ம் தேதி கடைசி என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இந்த யு.பி.எஸ்., கடந்த 2024, ஆக., 24ம் தேதி அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு ஊழியர்கள் யு.பி.எஸ்., திட்டத்தை தேர்வு செய்தால், தங்கள் அடிப்படை சம்பளம், அகவிலைப்படி கூட்டுத்தொகையில் 10 சதவீதம் செலுத்த வேண்டும்.

மத்திய அரசு தரப்பில் 18.50 சதவீதம் சேர்த்து கணக்கில் வரவு வைக்கப்படும். அரசின் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும் இந்த தொகையின் இருப்பு அடிப்படையில் ஓய்வூதியம் கிடைக்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us