ADDED : மே 22, 2025 02:28 AM
மூணாறு,:ஈரோட்டைச் சேர்ந்த வேலுச்சாமி, மனைவி உமா மகேஸ்வரி உட்பட 28 பேர் கொண்ட குழுவினர் மூணாறுக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் இங்கு பள்ளிவாசல் எஸ்டேட் பகுதியில் தனியார் விடுதியில் தங்கினர். அங்கு நேற்று முன்தினம் இரவு ' பயர் கேம்ப்' என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில் பங்கேற்ற பயணிகள் ஆடி, பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது உமாமகேஸ்வரி திடீரென மயங்கி விழுந்தார். அவரைமூணாறு டாடா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.