அடல் சேது பாலத்தில் விரிசல்: ஊழல் நடந்ததாக எதிர்க்கட்சிகள் புகார்
அடல் சேது பாலத்தில் விரிசல்: ஊழல் நடந்ததாக எதிர்க்கட்சிகள் புகார்
அடல் சேது பாலத்தில் விரிசல்: ஊழல் நடந்ததாக எதிர்க்கட்சிகள் புகார்
UPDATED : ஜூன் 21, 2024 10:01 PM
ADDED : ஜூன் 21, 2024 09:53 PM

மும்பை: பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட நாட்டின் மிகவும் நீள்மான கடல்பாலத்தில் விரிசல் ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
மஹாராஷ்டிராவின் மும்பைக்கும் ,நவி மும்பைக்கும் இடையே ரூ. 17 ஆயிரத்து 840 கோடி மதிப்பில் 22 கி.மீ. நீளம் கொண்ட அடல்-சேது கடல் மேல் பாலத்தை பிரதமர் மோடி கடந்த ஜன., 12-ம் தேதி திறந்து வைத்தார். இந்த பாலத்தில் பயணிப்பதன் மூலம் மும்பைக்கும் நவி மும்பைக்கும் இடையிலான பயண நேரம் 2 மணி நேரத்தில் இருந்து 20 நிமிடமாக குறைக்கப்படும். இந்தியாவின் மிகவும் நீண்ட பாலம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்பாலத்தினை இன்று(21.06.2024) மஹாராஷ்டிரா காங். தலைவர் நானா பட்டோல் ஆய்வு செய்தார். அப்போது பாலத்தில் பெருமளவு விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறினார். இதன் வீடியோவை செய்தி சேனல் ஒன்று வீடியோ வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இப்பாலம் கட்டியதில் பெருமளவு ஊழல் நடந்துள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின.