ADDED : மே 30, 2025 01:38 AM
மூணாறு:மூணாறு அருகே தேவிகுளத்தில் தனியார் தங்கும் விடுதியில் தமிழகத்தைச் சேர்ந்த கள்ளக்காதலர்கள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.
நாகபட்டினம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் முகேஷ்கண்ணன் 27. மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் நதியா 25.
இவர்கள் இருவரும் தனித்தனியாக திருமணம் முடிந்து தலா இரு குழந்தைகள் வீதம் உள்ளனர்.
இந்நிலையில் இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டு மே 23ல் மூணாறுக்கு வந்தனர். மூணாறு அருகே தேவிகுளத்தில் தனியார் தங்கும் விடுதியில் மே 27ல் அறை எடுத்து தங்கிய இருவரும் விஷம் குடித்து ஆபத்தான நிலையில் கிடந்ததை நேற்று காலை ஊழியர்கள் பார்த்தனர்.
தேவிகுளம் போலீசார் இருவரையும் மீட்டு தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தேவிகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.