கேரளாவில் காங்கிரஸ்... குஜராத்தில் பா.ஜ., ; 4 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்
கேரளாவில் காங்கிரஸ்... குஜராத்தில் பா.ஜ., ; 4 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்
கேரளாவில் காங்கிரஸ்... குஜராத்தில் பா.ஜ., ; 4 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்

நிலம்பூர்
நிலம்பூர் தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. அதில், கேரளாவின் நிலம்பூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஆர்யதன் ஷூகாத் முன்னிலை வகிக்கிறார். நிலம்பூர் தொகுதி காங்., எம்.பி., பிரியங்காவின் வயநாடு லோக்சபா தொகுதிக்குள் வருவதால், இந்த தேர்தல் முடிவு காங்கிரசுக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 14 சுற்றுகளின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்யதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரை விட 10,035 ஓட்டுகள் (மொத்த வாக்கு 58,098) முன்னிலையில் உள்ளார்.
லூதியானா மேற்கு
பஞ்சாப்பின் லூதியானா மேற்கு தொகுதியை கைப்பற்ற பா.ஜ., ஆம்ஆத்மி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. டில்லி தேர்தலுக்குப் பிறகு நடக்கும் இடைத்தேர்தல் என்பதால், இந்தத் தொகுதியை மீண்டும் கைவசப்படுத்த ஆம்ஆத்மி போராடுகிறது. அதன்படி, ஆம்ஆத்மி வேட்பாளர் சஞ்சீவ் அரோரா முன்னிலை வகிக்கிறார். பா.ஜ., சார்பில் ஜீவன் குப்தா போட்டியிட்டார். ஓட்டு எண்ணிக்கையில் 6 சுற்றுகள் முடிவில் ஆம் ஆத்மி 2,286 ஓட்டுகள் முன்னிலை வகிக்கிறது.
குஜராத்
விசாவதர் தொகுதியில் ஆம்ஆத்மி சார்பில் போட்டியிட்ட பூபேந்திர பயானி, கடந்த 2023ம் ஆண்டு பதவியை ராஜினாமா செய்து விட்டு, பா.ஜ.,வில் இணைந்து விட்டார். எனவே, இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. 2007ம் ஆண்டு முதல் இந்தத் தொகுதியை பா.ஜ., வென்றதே இல்லை. எனவே, இந்த முறை எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று கிர்த்தி படேலை பா.ஜ., களமிறக்கியது.
கலிகஞ்ச்
திரிணமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ-, நசாருதின் அகமது மறைவை தொடர்ந்து இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அவரது மகள் ஆலிபா அகமது திரிணமுல் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக போட்டியிட்டார்.