Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பணி தொடரும்: செயற்குழுக் கூட்டத்தில் கார்கே பேச்சு

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பணி தொடரும்: செயற்குழுக் கூட்டத்தில் கார்கே பேச்சு

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பணி தொடரும்: செயற்குழுக் கூட்டத்தில் கார்கே பேச்சு

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பணி தொடரும்: செயற்குழுக் கூட்டத்தில் கார்கே பேச்சு

UPDATED : ஜூன் 08, 2024 01:20 PMADDED : ஜூன் 08, 2024 11:53 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி: டில்லியில் நடந்த காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டத்தில், சோனியா, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பணி தொடரும் என செயற்குழுக் கூட்டத்தில் கார்கே பேசினார்.

டில்லியில் தனியார் ஹோட்டலில் இன்று (ஜூன் 08) காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தேர்தல் முடிவுகள், அரசியல் வியூகங்கள், எதிர்க்கட்சி தலைவர் பதவி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. லோக்சபா தேர்தலுக்கு பிறகு, முதல்முறையாக செயற்குழு கூட்டத்தை காங்கிரஸ் கட்சி கூட்டியுள்ளது.

உழைப்பும்.....! உறுதியும்.....!

கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் சோனியா, காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஜெயராம் ரமேஷ், ராகுல், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் , மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கார்கே பேசியதாவது:பொருளாதார ஏற்றத்தாழ்வு உள்ளிட்ட பிரச்னைகளை மக்கள் பிரச்னைகளாக மாற்றினார் ராகுல். கடின உழைப்பும், உறுதியும் இருந்தால் பெரிய எதிரிகளை வீழ்த்த முடியும். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நமது பணி தொடரும். காங்கிரசுக்கு பாதகமான முடிவுகள் வந்த மாநிலங்களில் நாம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

ஒற்றுமை

பார்லிமென்டிற்கு வெளியேயும் நமது இண்டியா கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமையை தொடர வேண்டும். நாம் அனைவரும் ஒழுக்கமாக இருக்க வேண்டும். அதேநேரம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். காங்கிரசுக்கு பாதகமான முடிவுகள் வந்த மாநிலங்களில் நாம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். 10 ஆண்டு கால பா.ஜ.,வின் பிரிவினை, வெறுப்பு அரசியலை வாக்காளர்கள் நிராகரித்துள்ளனர். எங்கள் மீது நம்பிக்கை வெளிப்படுத்தியதால் சர்வாதிகார சக்திகளுக்கு மக்கள் பதிலடி தந்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

140 கோடி மக்கள் விருப்பம்

கூட்டத்தில் பங்கேற்க வந்த தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி நிருபர்கள் சந்திப்பில், ''எங்கள் விருப்பமும், 140 கோடி மக்களின் விருப்பமும் ஒன்று தான். காங்கிரஸ் எம்.பி., ராகுல் எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்க வேண்டும்” என தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us