ரூ.10 கோடி கஞ்சா கடத்தல் கல்லுாரி மாணவன், மாணவி கைது
ரூ.10 கோடி கஞ்சா கடத்தல் கல்லுாரி மாணவன், மாணவி கைது
ரூ.10 கோடி கஞ்சா கடத்தல் கல்லுாரி மாணவன், மாணவி கைது
ADDED : ஜூன் 03, 2025 07:05 AM
திருவனந்தபுரம் : பாங்காங்கில் இருந்து 10 கோடி ரூபாய் மதிப்பிலான உயரக கஞ்சா கடத்தி வந்த கல்லுாரி மாணவன், மாணவியை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அதிகாரிகள் கைது செய்தனர்.
தாய்லாந்து, ஆப்பிரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து கேரளாவிற்கு எம்.டி.எம்.ஏ., மற்றும் உயர் ரக கலப்பின கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்துவது அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதற்காக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு பாங்காங்கில் இருந்து சிங்கப்பூர் வழியாக திருவனந்தபுரத்துக்கு வந்த விமானத்தில் போதை பொருள் கடத்துவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இதில் 23 வயது இளைஞர், 22 வயது பெண்ணிடமிருந்து 10 கிலோவுக்கு அதிகமான உயர் ரக கலப்பின கஞ்சா கைப்பற்றப்பட்டது.
இதன் மதிப்பு 10 கோடி ரூபாய்
விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முகம்மது ஷகித், சஹினா, என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும் மலப்புரத்தில் உள்ள ஒரு கல்லுாரியில் படித்து வருகின்றனர். இவர்கள் யாருக்காக கஞ்சா கடத்தி வந்தார்கள் என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.