Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/வங்கிகளில் கிளர்க் வேலைகள் இனி இல்லாமல் போய்விடும்: ரிசர்வ் வங்கி

வங்கிகளில் கிளர்க் வேலைகள் இனி இல்லாமல் போய்விடும்: ரிசர்வ் வங்கி

வங்கிகளில் கிளர்க் வேலைகள் இனி இல்லாமல் போய்விடும்: ரிசர்வ் வங்கி

வங்கிகளில் கிளர்க் வேலைகள் இனி இல்லாமல் போய்விடும்: ரிசர்வ் வங்கி

ADDED : ஜூலை 31, 2024 04:43 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மும்பை : டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியால், வங்கிகளில், கிளர்க் உள்ளிட்ட நடுத்தர பணிகளுக்கான தேவை, விரைவில் இல்லாமல் போகலாம் என, ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ், 'கரன்சி மற்றும் நிதி' என்ற தலைப்பில், ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நிதித்துறை சந்தித்து வரும் சவால்கள் குறித்து தெரிவித்திருப்பதாவது:

* வங்கித் துறையில் அவுட்சோர்சிங் மற்றும் தொலைவில் இருந்து பணியாற்றுவதை டிஜிட்டல் மயமாக்கல் பரவலாக்கி வருகிறது. மூலதனம் மற்றும் பணியாளர் ஊதியத்திற்கு இடையேயான இடைவெளியை தானியங்கி முறை அதிகரிப்பதால், குறைந்த திறனுக்கு குறைந்த ஊதியம்; அதிக திறனுக்கு அதிக ஊதியம் என்ற வேலைவாய்ப்பு சந்தை உருவாகிறது. அதே சமயம், தொழில்நுட்பம், நடுத்தர பணிகளை காணாமல் போகச் செய்கிறது.

* 2010 - 2011ம் நிதியாண்டில், தொழில்நுட்பம் மற்றும் பணியாளர்களின் பங்களிப்பு 50:50 என்ற விகிதத்தில் இருந்தது. ஆனால், 2022-- - 23ம் நிதியாண்டில், இதே விகிதம் 74:26 என்ற விகிதமாக மாறி உள்ளது.

* உலகளவில், வங்கித்துறையில் கீழ்மட்ட பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்து, தொழில்நுட்ப வல்லுனர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போக்கு காணப்படுகிறது. இதன் தாக்கம், இந்தியாவிலும் எதிரொலித்து வருகிறது.

* இந்தியாவின் வேலைவாய்ப்பு சந்தையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப திறன் உடையவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. 2023ல் நடைபெற்ற ஒட்டுமொத்த பணியமர்த்தலில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த பணியிடங்கள், 16.80 சதவீதம் பங்களிப்பை கொண்டு உள்ளது.

* இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம், 2026ல், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தற்போதைய 10 சதவீதத்தில் இருந்து, 20 சதவீதமாக வளர்ச்சியடையக் கூடும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us