Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ ஆர்.எஸ்.எஸ்., விஜயதசமி விழா; தலைமை நீதிபதியின் தாய் பங்கேற்பு

ஆர்.எஸ்.எஸ்., விஜயதசமி விழா; தலைமை நீதிபதியின் தாய் பங்கேற்பு

ஆர்.எஸ்.எஸ்., விஜயதசமி விழா; தலைமை நீதிபதியின் தாய் பங்கேற்பு

ஆர்.எஸ்.எஸ்., விஜயதசமி விழா; தலைமை நீதிபதியின் தாய் பங்கேற்பு

ADDED : அக் 01, 2025 04:07 AM


Google News
Latest Tamil News
நாக்பூர்: மஹாராஷ்டிராவில் நடக்கும் ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு நிறைவு மற்றும் விஜயதசமி விழாவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயின் தாய் கமலாடாய் கவாய் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

ஆர்.எஸ்.எஸ்., எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் சார்பில், ஆண்டுதோ றும் விஜய தசமி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இதில் பங்கேற்க, ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தத்தை பின்பற்றாதோருக்கும் அழைப்பு விடுக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு மற்றும் விஜயதசமி விழா மஹாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில், வரும் 5ம் தேதி நடக்கிறது.

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும்படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயின் தாய் கமலாடாய் கவாய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது . அவர் விருப்பம் தெரிவித்ததால், அழைப்பிதழில் அவரது பெயர் அச்சிடப்பட்டது.

இதற்கிடையே, விழாவில் அவர் பங்கேற்பது சந்தேகம் என, தகவல் வெளியானது.

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு மற்றும் விஜயதசமி விழாவில், சிறப்பு விருந்தினராக கமல்டாய் கவாய் பங்கேற்பார் என, நேற்று அறிவிப்பு வெளியானது.

ஸ்ரீ தாதா சாகேப் கவாய் தொண்டு நிறுவனத்தின் தலைவரான கமலாடாய், விதர்பா பகுதியில் சமூக சேவகராகவும், புகழ் பெற்ற கல்வியாளராகவும் அறியப்படுகிறார்.

சமூ கத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு காரணமாகவே, இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக ஆர்.எஸ்.எஸ்., குறிப்பிட்டது. ஆர்.எஸ்.எஸ்., மேடையில் தலைமை நீதிபதியின் தாய் கமலாடாய் கவாய் தோன்றுவது , தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அவரது இந்த முடிவு, கவாய் குடும்பத்திற்கும், ஆர்.எஸ்.எஸ்., சங்கத்துக்கும் இடையிலான ஒரு வரலாற்றுத் தொடர்பை நினைவுபடுத்துகிறது. 1981ல், நாக்பூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., விழாவில், தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயின் தந்தை ஆர்.எஸ்.கவாய் பங்கேற்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us