Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/12-ம் தேதி முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு

12-ம் தேதி முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு

12-ம் தேதி முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு

12-ம் தேதி முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு

ADDED : ஜூன் 08, 2024 01:21 AM


Google News
Latest Tamil News
ஐதராபாத்: ஆந்திரா முதல்வராக தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு வரும் 12-ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 175 இடங்களில் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்றது. பெரும்பான்மையுடன் முதல்வராக சந்திரபாபு நாயுடு வரும் 12-ம் தேதி பதவியேற்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக தெலுங்கு தேசம் கட்சி , மத்தியில் பா.ஜ. தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் முக்கிய இடம் பெற்றுள்ளது. இக்கூட்டணியில் பிரதமராக மோடி நாளை (ஜூன்09) பதவியேற்க உள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us