ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர்களுக்கு கார் பரிசு: தொழிலதிபர் சஜ்ஜன் ஜிண்டால் தாராளம்
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர்களுக்கு கார் பரிசு: தொழிலதிபர் சஜ்ஜன் ஜிண்டால் தாராளம்
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர்களுக்கு கார் பரிசு: தொழிலதிபர் சஜ்ஜன் ஜிண்டால் தாராளம்
ADDED : ஆக 03, 2024 11:00 AM

புதுடில்லி: ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் ஒவ்வொரு இந்திய வீரருக்கும் எம்ஜி விண்ட்சர் கார் பரிசாக வழங்கப்படும் என பிரபல தொழிலதிபர் சஜ்ஜன் ஜிண்டால் அறிவித்து உள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த பிரபல நிறுவனமான ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் தலைவர் சஜ்ஜன் ஜிண்டால். இந்த நிறுவனத்துடன் இணைந்து மோரிஸ் காரேஜஸ் இண்டியா என்ற நிறுவனமானது, எம்ஜிவிண்ட்சர் என்ற சொகுசு காரை தயாரித்து வருகிறது.
இந்நிலையில் சஜ்ஜன் ஜிண்டால் ‛எக்ஸ் ' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் ஒவ்வொரு இந்திய வீரர்களுக்கும் கார் பரிசாக வழங்கப்படும் என அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனெனில் நமது சிறந்த வீரர்கள் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் வெற்றிக்காக சிறப்பானதை பெறுவதற்கு தகுதியானவர்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த பதிவை பார்த்த சமூக வலைதளவாசிகள் சஜ்ஜன் ஜிண்டாலை பாராட்டி வருகின்றனர்.