உயர் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
உயர் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
உயர் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : மே 22, 2025 09:18 PM
சண்டிகர்:பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, நீதிமன்றம் முழுதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் சண்டிகரில் அமைந்துள்ளது. நீதிமன்ற பதிவாளர் அலுவலக இ-மெயில் முகவரிக்கு நேற்ரு காலை வந்த கடிதத்தில், 'நீதிமன்ற வளாகத்தில், சக்தி வாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டு இருக்கிறது'என கூறப்பட்டு இருந்தது.
போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சண்டிகர் போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், தடயவியல் துறையினர் மற்றும் மோப்ப நாய் பிரிவினர் விரைந்து வந்தனர்.
நீதிமன்றத்தின் பெரும்பாலான பகுதிகள் காலி செய்யப்பட்டு அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பொதுமக்கள் நீதிமன்ற வளாகத்துக்குள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
நீதிமன்றத்தின் அனைத்து அறைகள் மற்றும் வளாகம் முழுதும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது. ஆனால், வெடிபொருட்கள் எதுவும் இல்லை. இதையடுத்து, நேற்று பிற்பகலில் நீதிமன்ற பணிகள் வழக்கம் போல துவங்கின.
இதேபோல, அம்பாலா போலீஸ் துணைக் கமிஷனர் அலுவலகத்துக்கும் நேற்று முன் தினம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.