காங்கிரசின் பகல் கனவு நிறைவேறாது என்கிறது பா.ஜ.,
காங்கிரசின் பகல் கனவு நிறைவேறாது என்கிறது பா.ஜ.,
காங்கிரசின் பகல் கனவு நிறைவேறாது என்கிறது பா.ஜ.,
ADDED : ஜூன் 19, 2025 07:07 PM
லக்னோ:''பாகிஸ்தான் ஆதரவுடன் அதிகாரத்திற்கு வந்து விடலாம் என காங்கிரஸ் யோசிக்கிறது,'' என, உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுர்யா கூறினார்.
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நிலவும் உறவு குறித்து, காங்கிரஸ் தலைவர்கள் சிலர் ஆட்சேபகரமான வகையில் கருத்து தெரிவித்திருந்தனர். அவற்றிற்கு பதிலளிக்கும் வகையில், பா.ஜ.,வைச் சேர்ந்த, உ.பி., மாநில துணை முதல்வர் கேசவ பிரசாரத் மவுரியா கூறியுள்ளதாவது:
நம் இந்திய தலைவர்களை விட, பாகிஸ்தான் தலைவர்களைத் தான் காங்கிரஸ் அதிகமாக நம்பி வருகிறது. பாகிஸ்தான் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்து விடலாம் என அக்கட்சி எண்ணுகிறது. அந்த பகல் கனவு ஒருபோதும் நிறைவேறாது.
இவ்வாறு மவுரியா கூறினார்.