Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ பெங்களூரு கோர சம்பவம்; தாமாக முன்வந்து இன்று பிற்பகல் விசாரிக்கிறது நீதிமன்றம்

பெங்களூரு கோர சம்பவம்; தாமாக முன்வந்து இன்று பிற்பகல் விசாரிக்கிறது நீதிமன்றம்

பெங்களூரு கோர சம்பவம்; தாமாக முன்வந்து இன்று பிற்பகல் விசாரிக்கிறது நீதிமன்றம்

பெங்களூரு கோர சம்பவம்; தாமாக முன்வந்து இன்று பிற்பகல் விசாரிக்கிறது நீதிமன்றம்

ADDED : ஜூன் 05, 2025 11:39 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு: பெங்களூரு அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கர்நாடகா உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து இன்று விசாரிக்கிறது.

ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியினருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விதான் சவுதாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பெங்களூரு அணி வீரர்கள், சின்னசாமி மைதானத்தில் நடந்த பாராட்டு விழாவிலும் கலந்து கொண்டனர். அப்போது, பெங்களூரு அணி வீரர்களை பார்ப்பதற்காக சின்னசாமி மைதானம் முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். இதனால், ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 40க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து கப்பன் பார்க் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பிறகு, அவரவர் குடும்பத்தினரிடம் சடலங்கள் ஒப்படைக்கப்பட்டன. இந்த சம்பவத்திற்கு கர்நாடகா அரசே காரணம் என்று பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன.

இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சரும், பா.ஜ., எம்.பி.,யுமான ஷோபா கரண்ட்லாஜே வலியுறுத்தியுள்ளார்.

அரசு விழா அல்லாத இந்த நிகழ்ச்சியை விதான் சவுதாவில் நடத்தியது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், 11 பேரின் உயிரிழப்பிற்கு யார் பொறுப்பேற்க போகிறார்கள் என்றும் கேட்டுள்ளார். மேலும், உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த நிலையில், நாடு முழுதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கர்நாடகா உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க முடிவு செய்துள்ளது. இந்த வழக்கை பிற்பகல் 2.30 மணிக்கு விசாரிக்க உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us