Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ சபரிமலை சன்னிதானத்தில் போட்டோ அய்யப்பன் சிலை கொண்டு செல்ல தடை

 சபரிமலை சன்னிதானத்தில் போட்டோ அய்யப்பன் சிலை கொண்டு செல்ல தடை

 சபரிமலை சன்னிதானத்தில் போட்டோ அய்யப்பன் சிலை கொண்டு செல்ல தடை

 சபரிமலை சன்னிதானத்தில் போட்டோ அய்யப்பன் சிலை கொண்டு செல்ல தடை

Latest Tamil News
சபரிமலை: சபரிமலையில் போட்டோ எடுக்க, அய்யப்பன் சிலைகளை கொண்டு செல்ல தேவசம் போர்டு தடை விதித்துள்ளது.

கேரள உயர்நீதிமன்ற உத்தரவின்படி, சபரிமலையில் நடப்பு சீசனில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இங்கு பணிபுரியும் பூஜாரிகளுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சபரிமலை சன்னிதான திருமுற்றத்தில், பக்தர்கள் தங்கள் மொபைல் போன்களில் போட்டோ எடுக்க தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறுபவர்களின் மொபைல் போன் பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

ஏற்கனவே, செய்தியாளர்களுக்கும் இங்கு கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில நாட்களில் மட்டுமே செய்தியாளர்கள் திருமுற்றத்தில் போட்டோ எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பக்தர்கள், அய்யப்பன் சிலைகளை இருமுடி கட்டுடன் கொண்டு வந்து, அய்யப்பனை தரிசனம் நடத்திய பின், ஊருக்கு கொண்டு செல்வது வழக்கம். தற்போது இதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. படியேறும் முன் அதை எங்காவது வைத்துவிட்டு, அய்யப்பனை தரிசித்து திரும்பி போகும் போது எடுத்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பம்பை நதியில் பக்தர்கள் களையும் ஆடைகளை எடுப்பதற்கு குத்தகை விடப்பட்டுள்ளது. ஆனாலும் நதியில் குவியும் ஆடைகளை அள்ளுவது சிரமமாக உள்ளது. கேரள உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இதற்காக கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்படுவர் என்றும், 15 ஊழியர்கள் பம்பை நதிக்கரையில் ஒவ்வொரு 750 மீட்டர் இடைவெளியில் நின்று, தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டுக்கொண்டிருப்பர் என்றும் தேவசம் போர்டு கூறியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us