உருது மொழியில் பதவியேற்ற அசாதுதீன் ஓவைசி
உருது மொழியில் பதவியேற்ற அசாதுதீன் ஓவைசி
உருது மொழியில் பதவியேற்ற அசாதுதீன் ஓவைசி
ADDED : ஜூன் 26, 2024 01:20 AM
தெலுங்கானாவின் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி, லோக்சபாவில் நேற்று, உருது மொழியில் பதவியேற்றார்.
அப்போது, அம்பேத்கர் மற்றும் தெலுங்கானாவை புகழ்ந்து முழக்கமிட்ட அவர், 'ஜெய் பாலஸ்தீனம்' என்றும் கோஷமிட்டார்.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் நடக்கும் நிலையில், அசாதுதீன் ஓவைசி இவ்வாறு குறிப்பிட்டது, சபையில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு பா.ஜ., - எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, சபையை நடத்திய ராதா மோகன் சிங், ''பதவியேற்பை தவிர வேறு எதுவும் பதிவு செய்யப்படாது,'' என, உறுதி அளித்தார்.
இதன்பின், பார்லிமென்டுக்கு வெளியே செய்தியாளர்களிடம் அசாதுதீன் ஓவைசி கூறுகையில், ''மற்ற எம்.பி.,க்கள் அவர்களின் விருப்பப்படி பலவிதமாகக் கூறுகின்றனர். நான், 'ஜெய் பீம், ஜெய் மீம், ஜெய் தெலுங்கானா, ஜெய் பாலஸ்தீனம்' என்றேன். இதில் என்ன தவறு,'' என்றார்.