Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/கட்சி விரோத நடவடிக்கை: குஜராத் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., நீக்கம்

கட்சி விரோத நடவடிக்கை: குஜராத் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., நீக்கம்

கட்சி விரோத நடவடிக்கை: குஜராத் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., நீக்கம்

கட்சி விரோத நடவடிக்கை: குஜராத் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., நீக்கம்

ADDED : ஜூன் 26, 2025 03:58 PM


Google News
Latest Tamil News
ஆமதாபாத்: குஜராத்தில் கட்சி விரோத நடவடிக்கை காரணமாக, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., உமேஷ் மக்வானாவை இன்று நீக்கம் செய்துள்ளதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது.

குஜராத்தில் கடந்து மூன்று நாட்களுக்கு முன், இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி, விசாவதர் தொகுதியை தக்கவைத்து கொண்டது. அதை தொடர்ந்து இன்று ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,வும் கட்சியின் குஜராத் சட்டமன்ற கொறடா மற்றும் கட்சியின் தேசிய இணைச் செயலாளர் பதவி வகித்துவந்த உமேஷ் மக்வானா திடீரென கட்சியிலிருந்து ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமாவை தொடர்ந்து கட்சியிலிருந்து அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். உமேஷ் மக்வானா,பாவ்நகர் பல்கலைக்கழகத்தில் பி.எட் பட்டம் பெற்றவர், சமூக சேவகர் மற்றும் கொடையாளர், ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளை நிறுவியதற்காக உள்ளூரில் அறியப்படுகிறார்.

இது குறித்து உமேஷ் மக்வானா அறிக்கையில் கூறியதாவது:

பா.ஜ., மற்றும் காங்கிரஸைப் போலவே ஆம் ஆத்மி கட்சியும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மாற்றாந்தாய் மனப்பான்மையைக் காட்டியுள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரச்னைகளை எழுப்பத் தவறியநிலையில், ஆம் ஆத்மியின் எம்.எல்.ஏ.,வை தவிர கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் ராஜினாமா செய்கிறேன். இது குறித்து கட்சியின் தலைமைக்கு கடிதம் அனுப்பிவிட்டேன்.

இவ்வாறு உமேஷ் மக்வானா அறிக்கையில் கூறியிருந்தார்.

இது தொடர்பாக, ஆம் ஆத்மி மாநிலத் தலைவர் இசுதன் காத்வி கூறியதாவது:

கட்சி எதிர்ப்பு மற்றும் குஜராத் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக உமேஷ் மக்வானா 5 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us