Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/நக்சல் ஒழிப்பு நடவடிக்கை,மழைக் காலத்திலும் தொடரும்: அமித்ஷா திட்டவட்டம்

நக்சல் ஒழிப்பு நடவடிக்கை,மழைக் காலத்திலும் தொடரும்: அமித்ஷா திட்டவட்டம்

நக்சல் ஒழிப்பு நடவடிக்கை,மழைக் காலத்திலும் தொடரும்: அமித்ஷா திட்டவட்டம்

நக்சல் ஒழிப்பு நடவடிக்கை,மழைக் காலத்திலும் தொடரும்: அமித்ஷா திட்டவட்டம்

ADDED : ஜூன் 22, 2025 06:17 PM


Google News
Latest Tamil News
ராய்ப்பூர்:நக்சல்களை முழுமையாக ஒழிக்க, மழைக்காலத்திலும் பாதுகாப்பு படைகளின் நடவடிக்கைகள் தீவிரமாக தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக கூறினார்.

சத்தீஸ்கரின் நவ ராய்ப்பூர் அடல் நகரில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக வளாகம் மற்றும் மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

அதனை தொடர்ந்து அமித் ஷா பேசியதாவது:

அடுத்த ஆண்டு மார்ச் 31,க்குள் நக்சலிசம் ஒழிக்கப்படும். நக்சல்களை ஓய்வெடுக்க அனுமதிக்க மாட்டோம். அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மழைக் காலத்திலும் தொடரும். அவர்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு வளர்ச்சிப் பாதையில் இணைய வேண்டும். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தேவையில்லை. வர்ந்த இந்தியாவைப் பற்றிய பிரதமர் மோடியின் தொலை நோக்கு பார்வை, புதுமை, உள்கட்டமைப்பு, பொருளாதாரம முன்னேற்றம் ஆகியவற்றோடு, சரியான நேரத்தில் நீதி வழங்குவதிலும் கவனம் செலுத்துகிறது.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us