ADDED : ஜூன் 26, 2025 09:30 PM

பாலக்காடு; பாலக்காடு, நெம்மாரா அருகே நெல்லியம்பதி ஆரம்ப சுகாதார மையத்தில், உலக போதை தடுப்பு தின உறுதிமொழி ஏற்பு நடந்தது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், நெம்மாரா அருகே உள்ள வன எல்லை பகுதியில் உள்ள, நெல்லியாம்பதி ஆரம்ப சுகாதார மையத்தில், நேற்று உலக போதை தடுப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், சுகாதார ஆய்வாளர் ஆரோக்கியம் ஜோய்சன் 'போதையும் ஆபத்தும்' என்ற தலைப்பில் பேசினார். பொதுச்சுகாதார செவிலியர் ஷஹீதா தலைமை வகித்தார். இளநிலை சுகாதார ஆய்வாளர் அப்சல் போதை தடுப்பு உறுதிமொழி வாசிக்க, அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். இளநிலை சுகாதார ஆய்வாளர்களான சரண்ராம், சைனு சன்னி உட்பட பலர் பங்கேற்றனர்.