ஓசூரில் விமான நிலையம்: தமிழக முதல்வருக்கு கர்நாடகா மாஜி முதல்வர் பொம்மை எதிர்ப்பு
ஓசூரில் விமான நிலையம்: தமிழக முதல்வருக்கு கர்நாடகா மாஜி முதல்வர் பொம்மை எதிர்ப்பு
ஓசூரில் விமான நிலையம்: தமிழக முதல்வருக்கு கர்நாடகா மாஜி முதல்வர் பொம்மை எதிர்ப்பு
ADDED : ஜூலை 04, 2024 05:26 PM

புதுடில்லி: ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புக்கு, பா.ஜ., எம்.பி.யும், கர்நாடகா மாநில முன்னாள் முதல்வருமான பசவராஜ் பொம்மை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வளர்ந்து வரும் பெங்களூருக்கு கூடுதலாக ஒரு விமான நிலையம் தேவை. ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின், ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். 150 கி.மீ., இடைவெளிக்குள், இரண்டு விமான நிலையங்கள் அமைக்க முடியாது. ஓசூர் தமிழகத்தில் இருந்தாலும், அதன் ஒரு பகுதி, பெங்களூருக்குள்ளும் வருகிறது.
இங்கு விமான நிலையம் கட்டவில்லை என்றால், ஏற்கனவே நகரில் உள்ள எச்.ஏ.எல்., விமான நிலையத்தை, உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு பயன்படுத்தி கொள்ளலாம். நான் முதல்வராக இருந்தபோது, மத்திய பாதுகாப்பு அமைச்சரிடம் பேசினேன். அதற்கு அவர், 'மத்திய அரசு அனுமதி அளித்தால், எச்.ஏ.எல்., விமான நிலையத்தை பயன்படுத்த தயார்' என்றார்.
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுகிறார். நாடு முழுதும், பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை நடத்தியும், அவருக்கு முதிர்ச்சி வரவில்லை. ஆனால், மத உணர்வுகளை தொட்டு பேசுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.