மின் தடை செய்தும், ஸ்பீக்கர் வயர் துண்டித்தும் பிரசாரத்துக்கு இடையூறு; திமுக மீது விஜய் குற்றச்சாட்டு
மின் தடை செய்தும், ஸ்பீக்கர் வயர் துண்டித்தும் பிரசாரத்துக்கு இடையூறு; திமுக மீது விஜய் குற்றச்சாட்டு
மின் தடை செய்தும், ஸ்பீக்கர் வயர் துண்டித்தும் பிரசாரத்துக்கு இடையூறு; திமுக மீது விஜய் குற்றச்சாட்டு

உங்கள் அனைவருக்கும் என்றைக்கும் ஒரு மீனவ நண்பனாக இருக்கிற இந்த விஜய்யோட அன்பு வணக்கங்கள்.இந்த கப்பல் இருந்து வந்து இருக்கும் பொருட்களை எல்லாம் விற்பனை செய்வதற்கு அந்த காலத்தில் அந்தி கடைகள் இருக்கும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். உழைக்கிற மக்கள் இருக்கும் இடம் தான் நாகப்பட்டினம்.
14 ஆண்டுகளுக்கு முன்
மத வேறுபாடுகள் இல்லாத, மதசார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் உங்களுக்கு மீண்டும் வணக்கங்கள். தமிழகத்தில் மீன் ஏற்றுமதியில் 2ம் இடத்தில் இருப்பது நாகப்பட்டினம் ஹார்பர் தான். ஆனால் அங்கு நவீன வசதிகள் கூடிய மீன்கள் பதப்படுத்தும் வசதி இல்லை. ரொம்ப அதிகமாக குடிசைப்பகுதிகள் இருக்கும் இடம் தான் நாகப்பட்டினம். இலங்கை கடற்படையால் நமது மீனவர்கள் தாக்கப்படுவதையும் மதுரை மாநாட்டில் பேசி இருந்தேன். அது தவறா? மீனவர்களுக்கு குரல் கொடுப்பது நமது கடமை. 14 ஆண்டுகளுக்கு முன் நாகப்பட்டினத்தில் பொதுக்கூட்டம் நடத்தினேன்.
இதுதான் வித்தியாசம்
இந்த விஜய் களத்திற்கு வருவது ஒன்று புதுசு இல்லை கண்ணா, முன்னாடி விஜய் மக்கள் இயக்கம் என்று வந்து நிற்போம். இப்பொழுது தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் இயக்கமாக வந்து நிற்கிறோம். அவ்வளவு தான் வித்தியாசம். இது புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி.
மீனவர்கள் உயிர் எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு ஈழத் தமிழர்களின் கனவுகளும், வாழ்க்கையும் நமக்கு முக்கியம். மீனவர்கள் கஷ்டத்தை பார்த்து ஒரு கடிதம் எழுதிவிட்டு கப்சிப் என்று போவதற்கு நாம் கபட நாடக திமுக அரசு கிடையாது.
வெளிநாட்டில் முதலீடா?
சொந்த குடும்பத்தின் வளர்ச்சியும், சுயநலமும் தான் அரசிற்கு முக்கியமான வேலை. இங்கு இருக்கும் மக்கள் தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள். முதல்வர் வெளிநாடுகளுக்கு செல்லும்போதெல்லாம் அத்தனை கோடி, இத்தனை கோடி முதலீடு என்று சிஎம் சிரித்து கொண்டே சொல்வார்.
சிஎம் சார் மனதை தொட்டு சொல்லுங்கள் வெளிநாட்டு முதலீடா? அல்லது வெளிநாட்டில் முதலீடா?ஒட்டுமொத்த தமிழகத்துக்கான முதலீடா? உங்கள் குடும்பத்தோட முதலீடு வெளிநாட்டிற்கு போகுதா? நாகையில் உள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்தினால் குறைந்தா போவார்கள்?
பேசுவதே 3 நிமிடம்
பிரசாரத்துக்கு எத்தனை இடையூறுகள்? அஞ்சு நிமிஷம் தான் பேசணும்; பத்து நிமிஷம் தான் பேசணும் என்று. நான் பேசுவதே 3 நிமிடம். அதில் அதனை பேசக் கூடாது என்றால் நான் எதை தான் பேசுவேன்? பிரதமர் வந்தால் இத்தனை கட்டுப்பாடுகள் இருக்குமா? பிரசாரம் சென்றால் மின்தடை செய்கின்றனர். ஸ்பீக்கர் வயரைக் கட் பண்ணுறாங்க, மக்களைப் பார்த்து சிரிக்கக்கூடாது, மக்களைப் பார்த்து கையசைக்கக்கூடாது எனக் கட்டுப்பாடுகள்; எங்களுக்கு மட்டும் அதிகக் கட்டுப்பாடுகள் விதிக்கிறார்கள். செம்ம காமெடியாக இருக்கிறது.
பூச்சாண்டி வேலை
2026ல் இரண்டே பேருக்கு இடையில் தான் போட்டி. ஒன்று திமுக. மற்றொன்று தவெக. பூச்சாண்டி வேலை வேண்டாம். நேர்மையாக தேர்தலை சந்திக்க வாருங்கள். பார்த்துவிடலாம். கொள்கையை பேருக்கு மட்டும் வைத்து விட்டு குடும்பத்தை வைத்து தமிழகத்தை கொள்ளையடிக்கும் நீங்களா? தமிழகத்தின் இருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் ஒருத்தனாக இருக்கிற நானா? பார்த்துவிடலாம். மீண்டும் தடைகள் போட்டால் மக்கள் அனுமதி பெற்று பிரசாரத்திற்கு வருவேன். சிஎம் சார்.
நமக்கு தடையாக போடும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா? உங்கள் நல்லதுக்காக தவெக ஆட்சி அமைய வேண்டுமா?இந்த போர் முழக்கம் உங்களை ஒரு நிமிடம் கூட தூங்க விடாது. மன உறுதியுடன் இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி வணக்கம். இவ்வாறு விஜய் பேசினார்.