ADDED : மே 16, 2025 11:26 PM

ஆப்பரேஷன் சிந்துார் பிரதமர் மோடியின் அசைக்க
முடியாத அரசியல் மன உறுதியின் வெளிப்பாடு. பாகிஸ்தானுக்கு எதிரான நம்
நடவடிக்கை வெற்றி பெற காரணம், துல்லியமாக சேகரிக்கப்பட்ட உளவு தகவல்.
அதற்காக மேம்படுத்தப்பட்ட உளவு கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளோம்.
அமித் ஷா, மத்திய அமைச்சர், பா.ஜ.
திட்டத்தை அபகரிக்கிறார்!
கேரளாவின் அனைத்து புதிய திட்டங்களும் பிரதமர் மோடியால் கொண்டு வரப்பட்டவை. அப்படி நிறைவேற்றப்பட்ட 'ஸ்மார்ட்' சாலை திட்டத்துக்கு, முதல்வர் பினராயி விஜயன் பெயரெடுக்க விரும்புகிறார். பா.ஜ.,வால் மட்டுமே வளர்ச்சியடைந்த கேரளா என்பதை நிஜமாக்க முடியும்.
ராஜிவ் சந்திரசேகர், கேரளா பா.ஜ., தலைவர்
அரசியல் லாபம்!
சிந்துார் நடவடிக்கையிலிருந்து அரசியல் லாபம் ஈட்ட, மே 25ல் தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர்களின் கூட்டத்திற்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். அதே சமயம், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து கூடிய அனைத்து கட்சிக் கூட்டங்களில் அவர் பங்கேற்கவில்லை.
ஜெய்ராம் ரமேஷ், பொதுச்செயலர், காங்கிரஸ்
,