Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ இளைஞனுக்கு மனைவியை விருந்தாக்கி நகை பறிப்பு; கணவர் உட்பட மூவர் மீது வழக்கு

இளைஞனுக்கு மனைவியை விருந்தாக்கி நகை பறிப்பு; கணவர் உட்பட மூவர் மீது வழக்கு

இளைஞனுக்கு மனைவியை விருந்தாக்கி நகை பறிப்பு; கணவர் உட்பட மூவர் மீது வழக்கு

இளைஞனுக்கு மனைவியை விருந்தாக்கி நகை பறிப்பு; கணவர் உட்பட மூவர் மீது வழக்கு

ADDED : ஜூன் 06, 2025 09:15 AM


Google News
Latest Tamil News
திருவனந்தபுரம்; பக்கத்து வீட்டில் வசிக்கும் இளைஞருக்கு மனைவியை விருந்தாக்கி நகை, பணம் பறித்ததாக கணவர் உட்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கர்ப்பிணி மனைவியும் கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் ஏற்றுமானுார் அருகே அதிரம்புழா பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜூன் கோபி, 44. இவரது மனைவி தன்யா, 37. இவர்களது பக்கத்து வீட்டில் இளைஞர் ஒருவர் வாடகைக்கு வசித்து வந்தார். மூவரும் பரஸ்பரம் பழகி வந்தனர். அந்த இளைஞரிடம் ஏராளமான நகை, பணம் இருப்பதை தெரிந்து கொண்ட தம்பதி, அந்த இளைஞருடன் நெருங்கி பழகினர்.

அதன்படி கணவர் இல்லாத நேரத்தில் அந்த இளைஞரை தனது வலைக்குள் வீழ்த்திய தன்யா, ஒரு கட்டத்தில் அவருடன் உல்லாசமாக இருந்து அதை வீடியோவில் பதிவு செய்து கொண்டார்.

ஒரு நாள் அந்த இளைஞர் வீட்டுக்கு அர்ஜூன் கோபி மற்றும் அவரது நண்பர் அலன் தாமஸ் சென்று, தன்யா உடனான படங்களை காட்டி மிரட்டினர். பின், அவரிடமிருந்து 62 சவரன் நகை மற்றும் 60 லட்சம் ரூபாயை பறித்தனர்.

கடந்த 2022 மார்ச் முதல் 2024 டிசம்பர் வரை பலமுறை இவ்வாறு மிரட்டி பணம் பறித்தனர். ஒரு கட்டத்தில் நிலைமை மோசமாவதை உணர்ந்த அந்த இளைஞர் கோட்டயம் காந்திநகர் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில் தன்யாவும், அர்ஜூன் கோபியும் சேர்ந்து இளைஞரை ஏமாற்றியது தெரிய வந்தது.

மூவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முன் ஜாமின் கேட்டு கேரளா உயர் நீதிமன்றத்தில் மூவரும் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் தன்யாவை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். அவரை கோட்டயம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது தான் கர்ப்பிணியாக இருப்பதால் ஜாமின் அளிக்க வேண்டும் என கோரினார்.

அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. தலைமறைவாக உள்ள அர்ஜுன் கோபி, அலன் தாமசை போலீசார் தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us