முதல்வர் கட்டும் வீட்டிற்கு லஞ்சம் வாங்கிய சர்வேயர்
முதல்வர் கட்டும் வீட்டிற்கு லஞ்சம் வாங்கிய சர்வேயர்
முதல்வர் கட்டும் வீட்டிற்கு லஞ்சம் வாங்கிய சர்வேயர்
ADDED : ஜூலை 02, 2024 10:15 PM

அமராவதி: ஆந்திராவில் முதல்வர் வாங்கிய நிலத்தில் வீடு கட்ட நில உட்பிரிவுக்கு லஞ்சம் வாங்கிய இணை சர்வேயர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு , முன்னர் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது குப்பம் மாவட்டம் சிவபுரத்தில் 2 ஏக்கர் நிலம் வாங்கி அங்கு வீடு கட்ட திட்டமிட்டிருந்தார்.
முதல்வர் வாங்கிய நிலத்தில் வீடு கட்டுவதற்காக நில உட்புரிவு செய்ய தெலுங்கு தேச கட்சி பிரமுகரிடம் இணை சர்வேயர் ரூ. 1.80 லட்சம் வாங்கியுள்ளார்.
தற்போது சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ள நிலையில் தான் வீடு கட்ட திட்டமிட்டுள்ள நிலத்திற்கு இணை சர்வேயர் லஞ்சம் வாங்கிய விவகாரம் கடந்த ஜூன் மாதம் சந்திரபாபு நாயுடுவின் கவனத்திற்கு சென்றது.
இவ்விவகாரம் தொடர்பாக மாவட்ட கலெக்டர் , வருவாய்த்துறை அதிகாரிகள் துணை ரீதியாக விசாரணை நடத்தியதில் இணை சர்வேயர் லஞ்சம் வாங்கியது தெரியவந்தது. இணை சர்வேயரை சஸ்பெண்ட் செய்பட்டார்.