Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ பார்வை குன்றிய மாணவன் எழுதிய கதை புத்தகமானது

பார்வை குன்றிய மாணவன் எழுதிய கதை புத்தகமானது

பார்வை குன்றிய மாணவன் எழுதிய கதை புத்தகமானது

பார்வை குன்றிய மாணவன் எழுதிய கதை புத்தகமானது

ADDED : மார் 23, 2025 06:28 AM


Google News
Latest Tamil News
பாலக்காடு: பார்வை குன்றிய மாணவன், எழுதிய கதைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்பட்டது.

கேரளா மாநிலம், பாலக்காடு யாக்கரை பகுதியைச் சேர்ந்த வக்கீல் நவுபல் - ஷாஹிதா தம்பதியரின் 6 வயது மகன் அமீன். இவர், 95 சதவீத பார்வை குறைபாடு உள்ளவர். பாலக்காடு சுல்த்தான்பேட்டை அரசு ஆரம்ப பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கிறார்.

அமீன், தன் மனதில் தோன்றும் கற்பனைக் கதைகளை எழுதியுள்ளார். கதைகளை படித்த பள்ளி ஆசிரியை சக்கீராபானு, மாணவனின் திறமையை பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தார்.

பள்ளி நிர்வாகம், அமீன் எழுதிய கதைகளை தொகுத்து நுாலாக வெளியிட முடிவெடுத்தது. கடந்த, 18ம் தேதி 'என் கதைகள்' என்ற தலைப்பில் தொகுப்பட்ட புத்தகத்தை, பள்ளி தலைமை ஆசிரியர் அஷரப், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஜிஞ்சு ஜோஸ் ஆகியோர் வெளியிட்டனர்.

இத்தகவல் அறிந்த மாநில பொதுக்கல்வித் துறை அமைச்சர் சிவன்குட்டி, தன் முகநுாலில் அமீனை பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us