போலீஸ் அதிகாரி கன்னத்தில் ‛பளார்' விட்ட விமான நிறுவன பெண் ஊழியர்
போலீஸ் அதிகாரி கன்னத்தில் ‛பளார்' விட்ட விமான நிறுவன பெண் ஊழியர்
போலீஸ் அதிகாரி கன்னத்தில் ‛பளார்' விட்ட விமான நிறுவன பெண் ஊழியர்
ADDED : ஜூலை 11, 2024 10:25 PM

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சி.ஐ.எஸ்.எப். போலீஸ் அதிகாரி கன்னத்தில் தனியார் விமான நிறுவன பெண் ஊழியர் அறைந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.
ஸ்பைஸ் ஜெட் என்ற தனியார் நிறுவன பெண் ஊழியர் அனுராதா ராணி, இவர் இன்று ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எப். எனப்படும் மத்திய கம்பெனிகள் பாதுகாப்புபடை கட்டுப்பாட்டில் உள்ள நுழைவு வாயிலுக்குள் அத்துமீறி நுழைய முயன்றதாக கூறப்படுகிறது.
உடன் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கிரிராஜ் பிரசாத் என்ற சி.ஐ.எஸ்.எப். உதவி காவல் ஆய்வாளர், அப்பெண் ஊழியரை தடுத்து ஏதோ வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பெண் ஊழியர் உதவி காவல் ஆய்வாளரிடம் வாக்குவாதம் செய்ததுடன் பலர் முன் அவரது கன்னத்தில் அறைந்தார். இதன் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக பெண் ஊழியரை சக போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பெண் ஊழியர் கூறுகையில், தன்னை ஆபாச வார்த்தைகளால் திட்டியதால் கன்னத்தில் அறைந்ததாக கூறினார்.