ADDED : ஜூன் 10, 2025 10:19 PM
புதுடில்லி:கொரோனா தொற்று சோதனையில் பாசிட்டிவ் ஆக இருந்தவர், இணை நோய்களால் இறந்தார்.
டில்லி அருகே, 90 வயதான பெண், பல நோய்களால் அவதிப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தற்செயலாக நடத்தப்பட்ட கொரோனா சோதனையில், பாசிட்டிவ் என வந்தது.
அந்த பெண்ணுக்கு சுவாச கோளாறுகள், இருதய கோளாறு, சிறுநீரக பிரச்னை போன்றவை இருந்தன. இதனால், அவர் சிகிச்சை பெற்று வந்தார். அந்த பெண் நேற்று இறந்தார்.
டில்லியில் 691 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும், கடந்த 24 மணி நேரத்தில் மூன்று பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர்.