ADDED : செப் 01, 2025 12:20 AM
லக்னோ:உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள குடம்பா பகுதியில் ஆலம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்படுகிறது. தீபாவளி நெருங்குவதையொட்டி நேற்று பட்டாசு ஆலையில் ஏராளமானோர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென அங்கிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் ஆலையின் சுவர் இடிந்து விழுந்து ஏழு பேர் பலியாகினர்; மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.