Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ படகு கவிழ்ந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி; ஒருவரை தேடும் பணி தீவிரம்

படகு கவிழ்ந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி; ஒருவரை தேடும் பணி தீவிரம்

படகு கவிழ்ந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி; ஒருவரை தேடும் பணி தீவிரம்

படகு கவிழ்ந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி; ஒருவரை தேடும் பணி தீவிரம்

ADDED : மார் 20, 2025 08:11 AM


Google News
Latest Tamil News
ஷிவ்புரி: மத்திய பிரதேசத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாயமான சிறுமியை தேடும் பணி நடந்து வருகிறது.

ஷிவ்புரி மாவட்டம் ஹனியாதானா போலீஸ் எல்லைக்குட்பட்ட மட்டதில்லா அணைப் பகுதியில் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் மாலை (மார்ச் 18) 15 பேருடன் படகு ஒன்று சென்றுள்ளது.

இந்த நிலையில், படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 8 பேரை உள்ளூர் மக்கள் பத்திரமாக மீட்டனர். 7 பேர் தண்ணீரில் மூழ்கி மாயமாகினர். இது தொடர்பாக போலீசார் மீட்பு பணியில் இரவு பகலாக ஈடுபட்டனர்.

இதில், 3 குழந்தைகள் உள்பட 6 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களில் கன்ஹா,7, ஷிவா,8, சாய்னா,14, ராம்தேவி,35, லீலா,40, ஷர்தா,55 என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கும்கும் எனும் 15 வயது சிறுமியின் உடல் மட்டும் இன்னும் மீட்கப்படவில்லை. தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கி உயிர்தப்பிய ராம்தேவி கூறுகையில், ' படகில் திடீரென தண்ணீர் புகுந்தது. இதனால், ஒரு பக்கமாக படகு கவிந்தது. எனக்கு நீச்சல் தெரியாத போதும், கைகளை தண்ணீரில் அடித்து தத்தளித்து கொண்டிருந்தேன். அப்போது, சரியான சமயத்திற்கு மீட்பு படகு வந்ததால், உயிர்தப்பினேன்', எனக் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us