உ.பி.,யில் வேன் - பஸ் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு
உ.பி.,யில் வேன் - பஸ் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு
உ.பி.,யில் வேன் - பஸ் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு
ADDED : செப் 28, 2025 11:47 PM

லக்னோ:உத்தர பிரதேசத்தில் அரசு பஸ் மற்றும் வேன் மோதிய விபத்தில் குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.
உத்தர பிரதேசத்தின் சீதாபூரில் இருந்து லக்கிம்பூர் கேரிக்கு 15 பயணியருடன் வேன் ஒன்று நேற்று சென்றது. லக்கிம்பூர் கேரி பகுதியில், அந்த வேன் எதிரே வந்த அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் வேன் டிரைவர், பயணம் செய்த இரண்டு வயது குழந்தை உட்பட, 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; 10 பேர் காயமடைந்தனர்.
இதில் படுகாயம் அடைந்த ஏழு பேர், லக்னோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.


