இமயமலைக்குச் செல்வேன்: ஓய்வுக்குப் பிந்தைய ப்ளான் இதுதான் என்கிறார் தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார்!
இமயமலைக்குச் செல்வேன்: ஓய்வுக்குப் பிந்தைய ப்ளான் இதுதான் என்கிறார் தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார்!
இமயமலைக்குச் செல்வேன்: ஓய்வுக்குப் பிந்தைய ப்ளான் இதுதான் என்கிறார் தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார்!
ADDED : ஜன 08, 2025 07:48 AM

புதுடில்லி: அடுத்த மாதம் ஓய்வு பெற்ற பிறகு, இமயமலையில் பல மாதங்கள் தனிமையில் கழிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை தலைமைத் தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ராஜிவ் குமார் இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக இருந்து வருகிறார். இவர் கடந்த 2022ம் ஆண்டு தேர்தல் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டார். இவரது பதவிக்காலம் வரும் பிப்ரவரி 18ம் தேதி முடிவடைகிறது. அவர் நேற்று, தனது கடைசி தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார். அவர், டில்லிக்கு பிப்ரவரி 5ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கும் என்று அறிவித்துள்ளார்.
இந்நிலையில், அவர் ஓய்வுக்கு பிறகு என்ன திட்டம் இருக்கிறது என நிருபர்கள் சந்திப்பில், ராஜிவ் குமார் கூறியதாவது: அடுத்த மாதம் ஓய்வு பெற்ற பிறகு, இமயமலையில் பல மாதங்கள் தனிமையில் கழிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அடுத்த 5 மாதங்களுக்கு நான் தனிமையில் இருப்பேன்.
எனக்கு தனிமை மற்றும் சுய படிப்பு தேவைப்படுகிறது. ஆறாம் வகுப்பில் ஏ.பி.சி.டி., கற்க ஆரம்பித்தேன். ஸ்லேட் சுமந்து மரத்தடியில் அமர்ந்து படித்தேன். அந்த இடத்திற்கு மீண்டும் சென்று, குழந்தைகளுக்கு கற்பிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.