"இரு மடங்காக உயரப்போகும் விவசாயிகளின் வருமானம்": மத்திய அமைச்சர் சவுகான் பேட்டி
"இரு மடங்காக உயரப்போகும் விவசாயிகளின் வருமானம்": மத்திய அமைச்சர் சவுகான் பேட்டி
"இரு மடங்காக உயரப்போகும் விவசாயிகளின் வருமானம்": மத்திய அமைச்சர் சவுகான் பேட்டி
ADDED : ஜூன் 11, 2024 02:36 PM

புதுடில்லி: 'விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க, பிரதமர் மோடி தொடந்து வேலை செய்து வருகிறார்' என மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், வேளாண் மற்றும் விவசாயிகள் நலன், ஊரக மேம்பாடு துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இன்று அவர் தனது அலுவலகத்தில் கணபதி பூஜை நடத்தினார்.
மகிழ்ச்சி
பின்னர் அவர் கூறியதாவது: பிரதமர் மோடியின் எண்ணங்களை நிறைவேற்ற அதிகாரிகளுடன் இணைந்து பாடுபடுவோம். விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் மோடி நேற்று எடுத்த முடிவு எனக்கு மகிழ்ச்சியை தந்தது. விவசாயிகளின் சம்மான் நிதி மீண்டும் வழங்கப்பட உள்ளது. மோடி எண்ணத்தை தே.ஜ., கூட்டணி அரசு செய்து முடிக்கும்.
வருமானம்
பிரதமர் மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு விவசாயிகளின் நலனுக்காக அனைத்து பணிகளையும் செய்யும். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க, பிரதமர் மோடி தொடந்து வேலை செய்து வருகிறார். விவசாயிகளின் நலனுக்காக எடுக்கப்படும் எந்த முயற்சிக்கும், நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.