பள்ளி மாணவர்களுக்குள் மோதல்; மூவருக்கு கத்திக்குத்து
பள்ளி மாணவர்களுக்குள் மோதல்; மூவருக்கு கத்திக்குத்து
பள்ளி மாணவர்களுக்குள் மோதல்; மூவருக்கு கத்திக்குத்து
ADDED : மார் 21, 2025 05:05 PM

பாலக்காடு: பள்ளி மாணவர்களுக்குள் ஏற்பட்ட முதலில் மூன்று மாணவர்கள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் மலப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் பெருந்தல்மன்னா அடுத்த தாளக்கோடு பகுதியில் பிடிஎம் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்தப் பள்ளியில் ஆங்கிலம் மற்றும் மலையாள மீடியம் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குள் சில நாட்களாக தகராறு இருந்து வந்துள்ளது.
இந்தப் பள்ளியில் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவன் ஒருவன் நேற்று நடந்த தேர்வுக்கு வந்துள்ளான்.தேர்வு எழுதி முடித்து வெளியே வந்த நிலையில், அங்கிருந்த மாணவர்கள் மூவரை கத்தியால் குத்தி உள்ளான். காயமடைந்த மாணவர்கள் மூவரும் மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பாக கத்தியால் குத்திய மாணவன் உட்பட இருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மாணவன், ஏற்கனவே தகராறில் ஈடுபட்டதற்காக பள்ளி நிர்வாகத்தினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டவன்; போலீசாரால் எச்சரிக்கப்பட்டவன் என்பது குறிப்பிடத்தக்கது.