டூ - வீலர் - டெம்போ மோதலில் 3 பேர் பலி
டூ - வீலர் - டெம்போ மோதலில் 3 பேர் பலி
டூ - வீலர் - டெம்போ மோதலில் 3 பேர் பலி
ADDED : ஜூன் 15, 2025 09:25 PM
புதுடில்லி:நான்கு பேர் சென்ற இரு சக்கர வாகனம் மீது டெம்போ மோதியதில், மூன்று பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பியோடிய டெம்போ டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
வடக்கு டில்லியின் வெளிப்புறத்தில் உள்ள பாவானா தொழில் வளாகத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிய நான்கு இளைஞர்கள், ஒரே இரு சக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் இரவில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் சென்ற இரு சக்கர வாகனம் மீது எதிரே வந்த டெம்போ பயங்கரமாக மோதியது.
இதில், பிஜய், 38, ராமகாந்த், 30, மற்றும் நந்துகுமார், 23, ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ராஜாராம் என்பவர், அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் வாகனம் வாயிலாக, பூத்குர்டு என்ற இடத்தில் உள்ள மகரிஷி வால்மீகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இரு சக்கர வாகனம் மீது மோதி விட்டு, தப்பியோடிய டெம்போ டிரைவரை போலீசார் தேடுகின்றனர்.