மசூதியில் நிகழ்ந்த திடீர் குண்டுவெடிப்பில் 3 பேர் படுகாயம்; காஷ்மீரில் பதற்றம்
மசூதியில் நிகழ்ந்த திடீர் குண்டுவெடிப்பில் 3 பேர் படுகாயம்; காஷ்மீரில் பதற்றம்
மசூதியில் நிகழ்ந்த திடீர் குண்டுவெடிப்பில் 3 பேர் படுகாயம்; காஷ்மீரில் பதற்றம்
ADDED : ஜூன் 16, 2025 12:35 PM

ஸ்ரீநகர்: காஷ்மீரில் உள்ள மசூதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
ஹந்த்வாரா பகுதியில் அமைந்துள்ள மசூதியின் பழைய கட்டடத்தை இடித்து விட்டு, புதிய கட்டம் கட்டும் பணி நடைபெற்று கொண்டிருந்தது.
அப்போதும் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென வெடிகுண்டு ஒன்று வெடித்து சிதறியது. இதில், முடாசிர் அகமது மிர், குலாம் அகமது தந்த்ரே, ஓவைஸ் அகமது ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்து வருகின்றனர்.