சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை நடத்திய 3 பேர் கைது; துப்பாக்கிகள் பறிமுதல்
சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை நடத்திய 3 பேர் கைது; துப்பாக்கிகள் பறிமுதல்
சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை நடத்திய 3 பேர் கைது; துப்பாக்கிகள் பறிமுதல்
ADDED : செப் 02, 2025 11:03 AM

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ஆயுத தொழிற்சாலையை போலீசார் கண்டறிந்தனர். சதி செயலில் ஈடுபட்டு வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
டில்லியின் சராய் ரோஹில்லா பகுதியில் 16 வயது சிறுவன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அலிகாரில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ஆயுத தொழிற்சாலையை போலீசார் கண்டறிந்தனர். ஏராளமான ஆயுதக் குவியல்கள் பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ஆறு நாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கிகள் மற்றும் 250க்கும் மேற்பட்ட கைத்துப்பாக்கிகளுக்கான மூலப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது என போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 60 வயது நபர் 20 வருடமாக சட்டவிரோதமாக ஆயுத தொழிற்சாலை நடத்தி வருவதை ஒப்புக்கொண்டான். 1200க்கும் மேற்பட்ட ஆயுதங்களை பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்ததாக போலீசாரிடம் கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்தனர்.