சத்தீஸ்கரில் 2 நக்சல்கள் சுட்டுக்கொலை
சத்தீஸ்கரில் 2 நக்சல்கள் சுட்டுக்கொலை
சத்தீஸ்கரில் 2 நக்சல்கள் சுட்டுக்கொலை
ADDED : செப் 23, 2025 07:31 AM

நாராயண்பூர்: சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் மாவட்டத்தின் அபுஜ்மாத் என்ற இடத்தில் உள்ள வனப்பகுதியில், நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி அந்த பகுதியை நேற்று நம் வீரர்கள் சுற்றி வளைத்தனர்.
அப் போது அங்கு மறைந்திருந்த நக்சல்கள், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு நம் வீரர்களும் தாக்குதல் நடத்தினர்.
இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில், இரண்டு நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் தலைக்கு 80 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
சம்பவ இடத்தில் இருந்து ஏ.கே-., 47 துப்பாக்கி, ஆயுதங்கள், வெடி பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதை தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தேடுதல் வேட்டை தீவி ரப்படுத்தப்பட்டு உள்ளது. சத்தீஸ்கரில் இந்தாண்டில் மட்டும், பாதுகாப்பு படையினரின் என்கவுன்டர்களில் 249 நக் சல்கள் கொல்லப் பட்டனர்.