ஹெராயின் கடத்திய 2 பேர் சிக்கினர்
ஹெராயின் கடத்திய 2 பேர் சிக்கினர்
ஹெராயின் கடத்திய 2 பேர் சிக்கினர்
ADDED : ஜூன் 13, 2025 08:31 PM
சண்டிகர்:சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த இருவர், கைது செய்யப்பட்டு, 4.5 கிலோ ஹெராயின் மற்றும் 11 லட்சம் லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து, பஞ்சாப் டி.ஜி.பி., கவுரவ் யாதவ், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
மாநில போதைப் பொருள் தடுப்புப் படையினர், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த, குர்பேஜ் சிங் என்ற பேஜா மற்றும் அபிஜித் சிங் என்ற ஹேப்பி ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 4.5 கிலோ ஹெராயின் மற்றும் 11 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல்காரர் ராணாவுடன், குர்பேஜ் நேரடி தொடர்பில் இருப்பதும், ஹெராயினை சப்ளையை நம் நாட்டில் ஒருங்கிணைப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருவரிடம் தீவிர விசாரணை நடக்கிறது.
பாகிஸ்தான் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருப்போரை கைது செய்து, போதைப்பொருள் இல்லாத பஞ்சாப் மாநிலத்தை உருவாக்குவதில் போலிஸ் துறை உறுதியாக உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.