18வது லோக்சபா கூட்டத்தொடர்; ஜூன் 24ல் ஜனாதிபதி உரையுடன் துவக்கம்
18வது லோக்சபா கூட்டத்தொடர்; ஜூன் 24ல் ஜனாதிபதி உரையுடன் துவக்கம்
18வது லோக்சபா கூட்டத்தொடர்; ஜூன் 24ல் ஜனாதிபதி உரையுடன் துவக்கம்
UPDATED : ஜூன் 12, 2024 10:37 AM
ADDED : ஜூன் 12, 2024 10:33 AM

புதுடில்லி: 18வது லோக்சபா கூட்டத்தொடர் ஜூன் 24ல் ஜனாதிபதி, சபாநாயகர் உரையுடன் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமராக நரேந்திர மோடி கடந்த ஜூன் 9ம் தேதி பதவியேற்றார். அவருடன் 72 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். சபாநாயகர் பதவி இன்னும் யாருக்கு என முடிவு செய்யவில்லை. இந்த நிலையில், வரும் ஜூன் 24ம் தேதி ஜனாதிபதி உரையுடன் 18வது லோக்சபாவின் முதல் அமர்வு துவங்கும் என பார்லி., விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பி.,களுக்கு பதவி பிரமாணம் செய்துவைக்கப்படும் எனவும், ஜூலை 3 வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். ஜூன் 27ல் ராஜ்யசபா கூடுகிறது.