5 சிறுவர்கள் உட்பட 13 வங்கதேசத்தினர் சிக்கினர்
5 சிறுவர்கள் உட்பட 13 வங்கதேசத்தினர் சிக்கினர்
5 சிறுவர்கள் உட்பட 13 வங்கதேசத்தினர் சிக்கினர்
ADDED : மே 16, 2025 08:38 PM
புதுடில்லி:சட்டவிரோதமாக தங்கியிருந்த, ஐந்து சிறுவர்கள் உட்பட 13 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டனர். அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கை துவங்கியுள்ளது.
புதுடில்லியின் புறநகர் பகுதியான, அவுச்சந்தியில் தனிப்படை போலீசார், 13ம் தேதி அதிரடி சோதனை நடத்தினர்.
அங்கு தங்கியிருந்த முஹமது ரபிகுல்,50, கோதேசா பேகம்,41, முஹமது அனார் ஹுசைன்,37, முஹமது அமினுல் இஸ்லாம்,28, செரீனா பேகம்,27, அப்ரோசா கதுன்,25, முஹமது காகோன்,20, ஹஸ்னா,19, மற்றும் ஐந்து சிறுவர்கள் உட்பட 13 பேர், சட்டவிரோதமாக தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். வங்கதேசத்தின் குடிகிராம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது. எந்த ஆவணங்களும் இல்லாத, 13 பேரும் தங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஜலில் அஹமது என்ற ஏஜென்ட் உதவியுடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன், -வங்கதேச எல்லைக்கு பஸ்சில் வந்ததையும், வேலி அமைக்காத வயல் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து, அங்கிருந்து மேற்கு வங்கத்தின் கூச் பிஹாருக்கு ஆட்டோவில் சென்றதையும் ஒப்புக் கொண்டனர்.
மேலும், கூச் பிஹாரிலிருந்து டில்லிக்கு ரயிலில் வந்து, அங்கிருந்து ஹரியானாவின் கார்கோடாவுக்கு பஸ்சில் சென்றதையும் வாக்குமூலத்தில் கூறியுள்ளனர். கார்கோடா சிசானா கிராமத்தில் செங்கல் சூளையில் வேலை செய்த அவர்கள் சமீபத்தில் டில்லியின் புறநகர் பகுதிக்கு குடிபெயர்ந்ததையும் ஒப்புக் கொண்டனர்.
அவர்களிடமிருந்த வங்கதேச அடையாள ஆவணங்களை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை துவக்கியுள்ளனர்.