ADDED : மே 24, 2025 12:12 AM
புதுடில்லி,:சட்டவிரோதமாக தங்கியிருந்த, 121 வங்கதேசத்தினரை டில்லி போலீசார் கைது செய்தனர்.
நரேலா எஸ்டேட் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், வங்கதேசத்தினர் என சந்தேகிக்கப்பட்ட 831 பேர் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், 121 பேர் எந்த ஆவணங்களும் இன்றி டில்லியில் வசிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்கள், வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது, சட்டவிரோதமாக நம் நாட்டுக்குள் நுழைந்து டில்லியில் வசிப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து, 121 பேரும் கைது செய்யப்பட்டு, வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கை துவங்கியுள்ளது.
இந்த, 121 பேரும் வைத்திருந்த ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் மின்சார இணைப்பு ஆகியவை போலி ஆவணங்களை பயன்படுத்தி வாங்கியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து விசாரணை நடக்கிறது.