மூன்று மாதங்களுக்கு 114 விமானங்கள் ரத்து
மூன்று மாதங்களுக்கு 114 விமானங்கள் ரத்து
மூன்று மாதங்களுக்கு 114 விமானங்கள் ரத்து
ADDED : ஜூன் 06, 2025 09:24 PM
புதுடில்லி:“மேம்பாட்டுப் பணிகளுக்காக ஓடுபாதை மூடப்படுவதால், 15ம் தேதி முதல் மூன்று மாதங்களுக்கு, 114 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன,” என, டில்லி விமான நிலைய ஆபரேட்டிங் நிறுவனமான, 'டயல்' தலைமை நிர்வாக அதிகாரி விதே குமார் ஜெய்பூர்யர் கூறினார்
இதுகுறித்து, விதே குமார், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
நாட்டின் மிகப்பெரிய மற்றும் பரபரப்பான விமான நிலையமான இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தினமும் 1,450 விமானங்கள் கையாளப்படுகின்றன. இங்கு நான்கு ஓடுபாதைகள்- உள்ளன. அதில் ஒரு ஓடுபாதையில் மேம்பாட்டுப் பணிகள் செய்ய மே மாதம் திட்டமிடப்பட்டது. ஆனால், நெரிசல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அந்தப் பணிகளை வரும், 15ம் தேதி துவங்கி, செப்டம்பர் 15ம் தேதி செய்ய முடிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேம்பாட்டுப் பணி நடக்கும் மூன்று மாதத்துக்கு, 114 விமானங்கள் ரத்தி செய்யப்பட்டுள்ளன. மேலும், 86 விமானங்களில் வருகை மற்றும் புறப்பாடு நேரம் மாற்றியமைக்கப்படும்.
பணிகள் நிறைவடைந்து, செப்டம்பர் 15ம் தேதி ஓடுபாதையில் மீண்டும் சேவை துவங்கும்.
முன் அறிவிப்பு செய்து விட்டதால், பயணியருக்கு பெரிய பாதிப்பு ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.
விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.