Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/மோடியை பாராட்டி தபால் அட்டை அனுப்பிய 1.11 கோடி பேர்; புதிய கின்னஸ் சாதனை!

மோடியை பாராட்டி தபால் அட்டை அனுப்பிய 1.11 கோடி பேர்; புதிய கின்னஸ் சாதனை!

மோடியை பாராட்டி தபால் அட்டை அனுப்பிய 1.11 கோடி பேர்; புதிய கின்னஸ் சாதனை!

மோடியை பாராட்டி தபால் அட்டை அனுப்பிய 1.11 கோடி பேர்; புதிய கின்னஸ் சாதனை!

ADDED : அக் 16, 2025 08:27 PM


Google News
Latest Tamil News
ஆமதாபாத்: குஜராத்தை சேர்ந்த 1.11 கோடிக்கும் மேற்பட்ட தனிநபர்கள், பிரதமர் மோடியின் சாதனைகளை பாராட்டும் வகையில் தபால் அட்டைகளை எழுதி, புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

பிரதமர் மோடியின் சீர்திருத்தங்கள், சரக்கு மற்றும் சேவை வரி குறைப்பு, மேக் இன் இந்தியா, சுதேசி பிரசாரங்கள் போன்ற முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்து பாராட்டும் வகையில் இந்த தபால் கார்டுகள் எழுதப்பட்டன.

குஜராத் மாநில கூட்டுறவுத் துறையுடன் தொடர்புடைய விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், பொதுமக்கள் என 1.11 கோடிக்கும் மேற்பட்ட மக்கள், இந்த தபால் அட்டைகளை எழுதியுள்ளனர்.

அக்டோபர் 14 அன்று கின்னஸ் உலக சாதனை நிறுவன அதிகாரிகள் இந்த சாதனையை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தனர். காந்திநகரில் செய்தியாளர்களிடம் (கூட்டுறவு) அரசு செயலாளர் சந்தீப் குமார் கூறுகையில், ''ஒரு நாட்டின் பிரதமருக்கு கூட்டு நன்றியின் வெளிப்பாடாக இவ்வளவு தபால் அட்டைகள் எழுதப்பட்டது வரலாற்றில் இதுவே முதல் முறை,'' என்றார்.

சுவிஸ் சாதனையை முறியடிப்பு:

கின்னஸ் உலக சாதனை தரவுகளின்படி, மிக அதிக தபால் அட்டை அனுப்பியதில் முந்தைய சாதனையை சுவிஸ் மேம்பாட்டு மற்றும் ஒத்துழைப்பு நிறுவனம் (எஸ்டிசி) - வைத்திருந்தது, இது 6,666 தபால் அட்டைகளுடன் இந்த சாதனையை அடைந்தது.

குஜராத்தின் குறிப்பிடத்தக்க முயற்சி இப்போது அந்த சாதனையை மிகப்பெரிய வித்தியாசத்தில் முறியடித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us