Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ பீஹாரில் பா.ஜ., - ஐக்கிய ஜனதா தளத்துக்கு தலா 101 தொகுதிகள்!: சிராக் பஸ்வானுக்கு 29 இடங்களே ஒதுக்கீடு

பீஹாரில் பா.ஜ., - ஐக்கிய ஜனதா தளத்துக்கு தலா 101 தொகுதிகள்!: சிராக் பஸ்வானுக்கு 29 இடங்களே ஒதுக்கீடு

பீஹாரில் பா.ஜ., - ஐக்கிய ஜனதா தளத்துக்கு தலா 101 தொகுதிகள்!: சிராக் பஸ்வானுக்கு 29 இடங்களே ஒதுக்கீடு

பீஹாரில் பா.ஜ., - ஐக்கிய ஜனதா தளத்துக்கு தலா 101 தொகுதிகள்!: சிராக் பஸ்வானுக்கு 29 இடங்களே ஒதுக்கீடு

ADDED : அக் 12, 2025 11:54 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: பீஹார் சட்டசபை தேர்தலில் பா.ஜ., மற்றும் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் தலா 101 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக தொகுதிகளை எதிர்பார்த்த மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்திக்கு, 29 இடங்களே ஒதுக்கப்பட்டுள்ளன. பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. 243 தொகுதிகள் கொண்ட இம்மாநில சட்டசபைக்கு வரும் நவம்பரில் இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆளும் தே.ஜ., கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து கடந்த சில வாரங்களாகவே தீவிரமாக பேச்சுகள் நடந்து வந்தன.

ஒருமித்த கருத்து கடந்த முறை போதிய அளவுக்கு தொகுதிகள் ஒதுக்காத காரணத்தால், சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி தனித்து போட்டியிட்டது. இம்முறை, தொகுதி பங்கீட்டில் சலசலப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் பா.ஜ.,வைச் சேர்ந்த உயர்மட்ட தலைவர்கள் தீவிரமாக பேச் சு நடத்தி வந்தனர்.

இ தைத் தொடர்ந்து தொகுதிகள் ஒதுக்கீட்டில் கூட்டணிக்குள் ஒருமித்த கருத்து ஏற்பட்டதை அடுத்து, அதன் விபரம் நேற்று வெளியிடப்பட்டது.

அதன்படி கூட்டணியில் உள்ள பிரதான கட்சிகளான பா.ஜ .,வும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் தலா, 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இதற்கு அடுத்தபடியாக சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்திக்கு, 29 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி தலைமையிலான ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் உபேந்திர குஷ்வாஹா தலைமையிலான ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா கட்சிகளுக்கு, தலா ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இது குறித்து மத்திய அமைச்சரும், பீஹார் தேர்தல் பொறுப்பாளருமான தர்மேந்திர பிரதான் கூறியதாவது:

தொகுதி பங்கீட்டில் தே.ஜ., கூட்டணியில் உள்ள தலைவர்களுக்கு எந்த மனக்கச ப்பும் ஏற்படவில்லை. அனைவரும் ஒருமித்த கருத்துடன் தொகுதி பங்கீட்டை ஏற்றுக்கொண்டனர். தே.ஜ., கூட்டணியை சேர்ந்த தலைவர்கள், கட்சிக ளின் தொண்டர்கள் இந்த தொகுதி பங்கீடு குறித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தே.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிராக் பஸ்வான், மஞ்சி மற்றும் குஷ்வாஹா உள்ளிட்டோர் தொகுதி பங்கீடு தொடர்பாக பா.ஜ.,வுடன் காரசார விவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக முந்தைய தேர்தல்களில் ஒதுக்கியதை விட, இம்முறை கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் எ ன பஸ்வான் வலியுறுத்தி வந்ததாக பேச் சுகள் அடிபட்டன.

இதுவரை நடந்த தேர்தல்களில், பா.ஜ.,வை விட அதிக தொகுதிகளில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிட்டு இருந்தது. தற்போது, முதல் முறையாக இரு கட்சிக ளும் சமமான அளவில் தொகுதிகளை பங்கிட்டு கொண்டுள்ளன.

ராஜினாமா பீஹாரில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் விபா தேவி மற்றும் பிரகாஷ் வீர் தங்கள் பதவியை நேற்று ராஜினாமா செய்தனர். இவர்கள் பா.ஜ.,வில் சேர உள்ளனர்.

கடந்த தேர்தலில் எத்தனை தொகுதிகள்?

கடந்த 2020ல் நடந்த சட்டசபை தேர்தலின்போது நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், 115 தொகுதிகளில் போட்டியிட்டது. பா.ஜ., 110 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கியது. பஸ்வான் தனித்து போட்டியிட்டார். கூட்டணியில் இருந்த ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ஏழு இடங்களிலும், விகாஷ்ஷீல் இன்சான் கட்சி, 13 இடங்களிலும் போட்டியிட்டன. இதில் தே.ஜ., கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us