கரு கலைப்பு செய்த பெண் பலி: தந்தை, தாய் கைது
கரு கலைப்பு செய்த பெண் பலி: தந்தை, தாய் கைது
கரு கலைப்பு செய்த பெண் பலி: தந்தை, தாய் கைது
ADDED : ஜூன் 02, 2024 05:58 AM
பாகல்கோட்: கரு கலைப்பு செய்த பெண் பலியான வழக்கில், கரு கலைப்பு செய்ய துாண்டிய அவரது பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.
மஹாராஷ்ராவின் கோலாப்பூரை சேர்ந்தவர் சோனாலி, 33. இவருக்கு திருமணம் முடிந்து, இரண்டு மகள்கள் இருந்தனர்.
மூன்றாவது முறையாக கர்ப்பம் அடைந்தார். மீரஜில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சோனாலி வயிற்றில் வளர்வது, பெண் குழந்தை என்று தெரிந்தது. இதனால் கருவை கலைக்க முடிவு செய்தார்.
கர்நாடகாவின் பாகல்கோட் மகாலிங்கபுராவில் உள்ள ஒரு வீட்டில், கடந்த மாதம் 27ம் தேதி சோனாலிக்கு கரு கலைப்பு நடந்தது. ஆனால் ரத்த போக்கால் இறந்தார்.
சோனாலிக்கு கரு கலைப்பு செய்ததாக, அரசு மருத்துவமனை நர்சு கவிதா, சோனாலியின் உறவினர் விஜய் கோலி, இடைத்தரகர் மாருதி கெய்க்வாட் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சோனாலியை கரு கலைப்பு செய்ய துாண்டியதாக, அவரது தந்தை சஞ்சய், 57, தாய் சங்கீதா, 52, ஆகிய இருவரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். மேலும் 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.