ரேஷன் கடைக்கு மீண்டும் உரிமம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி
ரேஷன் கடைக்கு மீண்டும் உரிமம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி
ரேஷன் கடைக்கு மீண்டும் உரிமம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி
ADDED : ஜூன் 16, 2024 07:19 AM
பெங்களூரு: ரத்து செய்யப்பட்ட ரேஷன் கடை உரிமத்தை மீண்டும் வழங்க, 70,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய உணவு துறை பெண் அதிகாரி, இடைத்தரகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரில் வசிப்பவர் ஆனந்த். ரேஷன் கடையை குத்தகைக்கு எடுத்துள்ளார். இங்கு விற்கப்படும் உணவுப் பொருட்கள், தரம் இல்லாமல் இருப்பதாகக் கூறி, சில தினங்களுக்கு முன்பு, ரேஷன் கடை உரிமத்தை, உணவு மற்றும் பொது வினியோக துறை அதிகாரிகள் ரத்து செய்தனர்.
உணவு மற்றும் பொது வினியோக துறை இணை இயக்குனர் ப்ரீத்தியை, 45, சந்தித்த ஆனந்த், ரத்து உத்தரவை திரும்பப் பெறும்படி கேட்டுக் கொண்டார்.
இதற்காக 70,000 ரூபாய் தருமாறு ப்ரீத்தி கேட்டுள்ளார். முதல்கட்டமாக 50,000 ரூபாய் கொடுத்துள்ளார். மேற்கொண்டு 20,000 ரூபாய் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆனந்த், லோக் ஆயுக்தாவில் புகார் செய்தார்.
நேற்று முன்தினம் மாலை ப்ரீத்தியை சந்தித்த ஆனந்த் 20,000 ரூபாய் கொடுத்தார். அப்போது, அங்கு வந்த லோக் ஆயுக்தா அதிகாரிகள் ப்ரீத்தியை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த இடைத்தரகர் ரமேஷ் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவர் மீதும், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.