தண்டவாளத்தில் கம்பிகள் பெரும் விபத்து தவிர்ப்பு
தண்டவாளத்தில் கம்பிகள் பெரும் விபத்து தவிர்ப்பு
தண்டவாளத்தில் கம்பிகள் பெரும் விபத்து தவிர்ப்பு
ADDED : ஜூலை 23, 2024 09:09 PM
ஜெய்ப்பூர்:ராஜஸ்தானில், தண்டவாளத்தில் இரும்புக் கம்பிகள் கிடப்பதை டிரைவர் பார்த்து ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
அசர்வா - ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில், துங்கர்பூர் நிலையத்திலிருந்து நேற்று முன் தினம் இரவு 8:00 மணிக்கு புறப்பட்டது. செல்லும் வழியில் தண்டவாளத்தில் இரும்புக் கம்பிகள் கிடப்பதை ரயில் டிரைவர் கவனித்து உடனே ரயிலை நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. டிரைவர் மற்றும் ரயில்வே ஊழியர்கள் சென்று தண்டவாளத்தில் கிடந்த ஆறு இரும்புக் கம்பிகளை அப்புறப்படுத்தினர். மேலும், இதுகுறித்து, ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த இரும்புக் கம்பிகளை டிரைவர் கவனிக்கத் தவறி இருந்தால், ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும் என ரயில்வே போலீசார் கூறினர்.