ராமர் கோவிலை திறந்தது ஏன்? மடாதிபதிக்கு காங்., கேள்வி!
ராமர் கோவிலை திறந்தது ஏன்? மடாதிபதிக்கு காங்., கேள்வி!
ராமர் கோவிலை திறந்தது ஏன்? மடாதிபதிக்கு காங்., கேள்வி!
ADDED : ஜூலை 08, 2024 06:34 AM

மங்களூரு: ''பணிகள் முழுமையாக முடியாமல் அயோத்தி ராமர் கோவிலை திறந்தது ஏன்,'' என, பெஜாவர் மடாதிபதிக்கு, கர்நாடக காங்கிரஸ் பொது செயலர் பத்மராஜ் கேள்வி எழுப்பி உள்ளார்.
மங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
லோக்சபா தேர்தலில், ஏழைகளை காங்கிரஸ் கவர்ந்து இழுத்ததால், பா.ஜ.,வுக்கு எதிர்பார்த்த இடங்கள் கிடைக்கவில்லை என்று, பெஜாவர் மடாதிபதி விஸ்வ பிரசன்ன தீர்த்த சுவாமிகள் கூறியுள்ளார். அரசியல் விஷயங்களில் அவர் தலையிட கூடாது.
ஹிந்து சமூகத்தில் உள்ள பாகுபாடுகளை அகற்றுவதில் அவர் கவனம் செலுத்த வேண்டும். ஹிந்து சமூகத்தை பா.ஜ.,விடம் யாரும் அடகு வைக்கவில்லை.
அயோத்தி ராமர் கோவிலில் மேற்கூரையில் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளது. பணிகள் முழுமையாக முடியாத நிலையில், கோவிலை அவசரமாக திறந்தது ஏன்.
பெஜாவர் மடாதிபதி ஒரு சமூகத்திற்காக பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அனைத்து சமூக மக்களுக்கும் தர்மத்தின் வழிகாட்டுதலை வழங்குங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.