சிறுத்தையை கொன்றது யார்? வனத்துறையினர் விசாரணை
சிறுத்தையை கொன்றது யார்? வனத்துறையினர் விசாரணை
சிறுத்தையை கொன்றது யார்? வனத்துறையினர் விசாரணை
ADDED : ஜூன் 16, 2024 07:30 AM
தாசனபுரா: பெங்களூரு தாசனபுரா சுற்றுப்புறங்களில் அட்டகாசம் செய்து வந்த ஆண் சிறுத்தையை கொன்றவர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
பெங்களூரு தாசனபுரா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், கடந்த ஆறு மாதங்களாக ஒரு சிறுத்தை புகுந்து, ஆடு, கோழிகளை அடித்துத் தின்று அட்டகாசம் செய்து வந்தது. பீதி அடைந்த மக்கள், சிறுத்தையை பிடிக்க வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, சிறுத்தை பிடிக்க வனத்துறையினர் மூன்று கூண்டுகளை வைத்தனர்.
அட்டகாசம் செய்து வந்த சிறுத்தையை, வனத்துறையினர் அடையாளம் கண்டும் வைத்திருந்தனர். இந்நிலையில், நேற்று காலை அந்த சிறுத்தை தாசனபுரா வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இறந்து கிடந்தது.
இது பற்றி அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று, சிறுத்தையின் உடலை பார்வையிட்டனர்.
அந்த சிறுத்தையை யாராவது கொன்று, தேசிய நெடுஞ்சாலையில் வீசி இருக்கலாம் என்று வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
சாலையில் வீசப்பட்ட சிறுத்தை மீது வாகனங்கள் ஏறி இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
கிராமங்களுக்குள் புகுந்து அட்டாகசம் செய்து வந்த ஆண் சிறுத்தை இது. இதற்கு 6 வயது ஆகும்.