கெஜ்ரிவால் என்ன பயங்கரவாதியா?: டில்லி ஐகோர்ட்டில் வக்கீல் வாதம்
கெஜ்ரிவால் என்ன பயங்கரவாதியா?: டில்லி ஐகோர்ட்டில் வக்கீல் வாதம்
கெஜ்ரிவால் என்ன பயங்கரவாதியா?: டில்லி ஐகோர்ட்டில் வக்கீல் வாதம்
ADDED : ஜூலை 17, 2024 04:25 PM

புதுடில்லி: சிபிஐ கைது நடவடிக்கைக்கு எதிராக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த மனு மீதான விவாதத்தின் போது, 'கெஜ்ரிவால் ஒரு முதல்வர். அவர் பயங்கரவாதி இல்லை'' என டில்லி ஐகோர்ட்டில் அவரது தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். மனு மீதான விசாரணை ஜூலை 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, கெஜ்ரிவாலை ஜூன் 26ம் தேதி திஹார் சிறையில் வைத்து கைது செய்தது. சிபிஐ கைது நடவடிக்கைக்கு எதிராக டில்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (ஜூலை 17) விசாரணைக்கு வந்தது.
பயங்கரவாதி அல்ல...!
அப்போது கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ‛‛ ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருக்க வேண்டும் என சி.பி.ஐ., விரும்பியதால், அவரை வஞ்சகமாக கைது செய்துள்ளது. கெஜ்ரிவால் வெளியே வந்துவிடுவார் என்று சி.பி.ஐ., உணர்ந்தது. அதனால் அவரைக் கைது செய்தது.
ஒத்திவைப்பு
அவர் ஒரு முதல்வர். பயங்கரவாதி இல்லை. சிபிஐயை குறை கூற விரும்பவில்லை. மூன்று நாட்களுக்கு முன்பு இம்ரான் கான் ஒரு வழக்கில் விடுவிக்கப்பட்டார், ஆனால் மற்றொரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார்'' என வாதிட்டார். இதையடுத்து மனு மீதான விசாரணை ஜூலை 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கெஜ்ரிவால் ஜாமின் மனு மீதான விசாரணையும் ஒத்திவைக்கப்பட்டது.